சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 42,020 கொரோனா தடுப்பூசிகள்

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 42,020 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-10 15:45 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தற்போதுள்ள 42,020, டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில் நாளை (11ம் தேதி) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் ( 398 ) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( 87 ) , நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( 4 ) , அனைத்து அரசு மருத்துவமனைகள் ( 12 ), அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட்ட 24 மையங்கள் என மொத்தம் 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட உள்ளது.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ , மாணவிகளும் தவறாமல் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுவதோடு, தேவையான கல்லூரிகளுக்கு அவர்களின் வளாகத்திலேயே தடுப்பூசி போடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News