சேலத்தில் ஊரடங்கு விதியை மீறிய 246 பேர் மீது வழக்கு

Update: 2021-04-26 03:45 GMT

சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, கார், பைக்குகளில் வந்தவர்களை நிறுத்தி எதற்காக வெளியே வந்தீர்கள் எனக் கேட்டு விசாரித்தனர். அதில் மருத்துவமனை, திருமணம் போன்வற்றிற்கு வந்தவர்களையும், அவசர பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களையும் விடுவித்தனர்.

தேவையின்றி சாலையில் சுற்றியவர்களை பிடித்து வழக்கு நடவடிக்கை எடுத்தனர். இந்த வகையில் மல்லூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி என மாவட்டம் முழுவதும் விதியை மீறிய 246 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சேலம் மாநகரிலும் ஊரடங்கு விதியை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News