பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் , புத்தாண்டு சிறப்பு விற்பனை தொடக்கம்
சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் தைத் திருநாளை முன்னிட்டு சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக்கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் இன்று கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் தை திருநாளை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூம்புகார் டி சேலைகள் மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள் வெள்ளை உலகப் பொருட்கள் மரத்தினால் செய்யப்பட்ட ஐந்து ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய இந்த கண்காட்சி ஆனது வரும் 2021 ஜனவரி 16 ம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் மேலாளர் நரேந்திர போஸ், பூம்புகார் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.