கனவு தொல்லையால் பரிகாரம்.. பாம்பு கடித்து நாக்கை இழந்த விபரீதம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கனவு தொல்லையால் ஜோதிடர் மற்றும் பூசாரியின் பேச்சைக் கேட்டு புற்று முன்பு நின்று நாக்கை நீட்டி பரிகார பூஜை செய்த மத்திய அரசு ஊழியரின் நாக்கை பாம்பு கடித்தது.

Update: 2022-11-26 03:00 GMT

மருத்துவர் செந்தில்குமரன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் - சத்தி சாலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்  மத்திய அரசு ஊழியராக (வயது 54) பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே இரவில் தூங்கும்போது ஒவ்வொரு நாளும் பாம்பு கனவில் வந்துள்ளது. முதல் நாள் கனவில் பாம்பு படம் எடுத்ததாகவும், இரண்டாம் நாள் கனவில் இரண்டு பாம்புகள் பின்னி  இருந்ததாகவும், மூன்றாம் நாள் கனவில் பாம்பு காலில் சுற்றி இருப்பது போன்றும் கனவு வந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் தூக்கத்தை இழந்து பல நாட்களாக தவித்து வந்த மத்திய அரசு ஊழியர், இது குறித்து ஜோதிடர் ஒருவரை சந்தித்த போது,  இறுதியாக, நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு ஜோதிடர் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜோதிடர் அவரை பாம்பு புற்று இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த கோயில் பூசாரியும் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும், பூசாரி அவரிடம் விசாரித்த போது கண்ணாடி விரியன் பாம்புடன்  தோஷம் ஒத்து இருப்பதால் புற்றுக்கு முன்பு நாக்கை நீட்டி சில மந்திரங்களை கூற வேண்டும் எனக் கூறியுள்ளார். அதை கேட்டு உயிருடன் உள்ள ஒரு கண்ணாடி விிரியன் பாம்புடன் புற்றுக்கு முன் நின்று கொண்டு நாக்கை நீட்டி, பூசாரி கூறிய மந்திரங்களை சொல்லி, புற்று முன்பு காற்றை ஊதியுள்ளார்.

அப்போது புற்றில் இருந்த பாம்பு திடீரென மூன்றாவது முறையாக ஊதிய போது வெளியேறி அரசு ஊழியரின் நாக்கில் கடித்தது. அலறி துடித்த அவரை பூசாரி கத்தியை கொண்டு நாக்கை வெட்டியுள்ளார். இதனையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 7 நாட்களாக சிகிச்சை பெற்றார். பாம்பின் விஷத்தினால் நாக்கில் உள்ள திசுக்கள் அழிந்துவிட்ட நிலையில் அரசு ஊழியரின் நாக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறும்போது, பாம்புகள் குறித்த கட்டுக்கதை, மூடநம்பிக்கைகளை யாரும் நம்ப வேண்டாம்  எனவும், 7 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அந்த நபர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி விட்டார் என மருத்துவர் செந்தில்குமரன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜோதிடர் மற்றும் பூசாரிக்கு தொடர்பு உள்ளதா? பூசாரிக்கு பாம்பு எப்படி கிடைத்தது. அதிக விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பினை அவர் எப்படி பிடித்து கையில் வைத்திருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து உள்ளன.

இதைப்போன்ற மூட நம்பிக்கைகளை படித்தவர்களே நம்பி அதற்கு பரிகாரமும் செய்வது வேடிக்கையாக உள்ளது. இதனால் அவருக்கு நாக்கு எப்படி உள்ளது என்பதும் முழுமையாகத் தெரியவில்லை. 

Tags:    

Similar News