தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதியது

காவேரிப்பாக்கம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்

Update: 2021-07-22 12:00 GMT

விபத்து ஏற்படுத்திய ஆட்டோ 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த கார்த்திக் , இவர் காவேரிப்பாக்கம் மசூதிக்குச் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, காவேரிப்பாக்கம் உப்புமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் ஓட்டி வந்த லோடு ஆட்டோ கார்த்திக் மீது வேகமாக மோதியது

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த கார்த்திகை அங்குள்ள பொதுமக்களும், காவேரிப்பாக்கம் போலீசாரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News