காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி ஐடிஐ படித்த வாலிபர் பலி

காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் ஏரியில் நண்பருடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.;

Update: 2021-12-16 04:11 GMT

ஏரியில் மூழ்கி உயிரிழந்த விக்னேஷ்

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம்  அடுத்த ஆலப்பாக்கம் பஜனைக்கோயில் தெருவைச்சேர்ந்த விக்னேஷ்,(23),இவர் ஐடிஐ படித்து விட்டு வேலைத் தேடிவந்ததாகக் கூறப் படுகிறது..

இந்நிலையில் விக்னேஷ் அவருடைய நண்பர் பெருமாளுடன் ஏரிக்குச் சென்றார். அங்கு ,பெருமாள் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது விக்னேஷ் மட்டும் நீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது , திடீரென விக்னேஷ் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினார். உடனே அதிர்ச்சியில் பெருமாள், விக்னேஷைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்.

அதனைக்கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து  விக்னேஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, விக்னேஷ்  உயிரிழந்தது   தெரிய வந்தது.

மேலும்,இதுகுறித்து  தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷின் சடலத்தைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விக்னேஷின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News