இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: வாலிபர் பலி

காவேரிப்பாக்கம் அடுத்த பன்னீயூர்கூட்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி வாலிபர் பலியாகினார்.;

Update: 2021-08-28 08:46 GMT

காவேரிப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் பலியான வாலிபர் முருகன்.

காவேரிப்பாக்கம் அடுத்த பன்னீயூர் கூட்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி வாலிபர் பலியாகினார்.

இராணிப்பேட்டை வாலாஜாப்பேட்டை அடுத்த அனந்தலையைச் சேர்ந்தவர் முருகன்(30). அவர் நேற்று அவரது பாட்டி ஊரான கல்பலாம்பட்டில் நடந்த திருவிழாவிற்கு  பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வழியில் பன்னீயூர் கூட்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் பைக் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து தகவலறிந்த, காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News