வயிற்று வலியை தாங்க முடியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

நெமிலி அடுத்த பெரிய காஞ்சியை சேர்ந்த வாலிபர். வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-09-06 04:45 GMT

பைல் படம்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்தபெரிய காஞ்சியை சேர்ந்தவர் செந்தில்(35) . அவர் அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாகத் தெரிகிறது.

அதற்காக செந்தில் ,பல  டாக்டர்களிடம் சென்று  சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வயிற்று வலி குணமாகாமல் இருந்தது காரணமாக செந்தில்,கடந்த 2மாதங்களுக்கு முன் வயிற்று வலியை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது  மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் செந்தில் அவரது மனைவி ரேகாவுடன் சைனபுரத்தில் உள்ள  அண்ணனன் கனேசன் வீட்டிற்கு வந்தார். வந்த இடத்தில் அவருக்கு    வயிற்றுவலி ஏற்பட்டது . .

அதனால், பக்கத்து வீட்டிற்குசென்று படுப்பதாக கூறிவிட்டு சென்றார்.வெகு நேரமாகியும் அவர் எழுந்து வராமல் இருந்ததால்  உறவினர் ,அங்குசென்று பார்த்துள்ளனர்

அப்போது வீட்டின் கதவு உள்பக்க தாழ்பால் போட்டிருந்தது.எனவே ஜன்னல் வழியாக எட்டிபார்த்ததில் பேன் கொக்கியில் தூக்கிட்டு செந்தில் சடலமாக கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்

பின்னர் உறவினர்கள் ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டனர் . இதுகுறித்து செந்திலின் மனைவி ரேகா தந்த புகாரின் பேரில் நெமிலி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்..

Tags:    

Similar News