பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

நெமிலியடுத்த ஜாகீர்தண்டலம் கண்டிகை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதியதில் 2பெண்கள் உயிரிழந்தனர்;

Update: 2021-12-11 04:45 GMT

பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதியதில் பலியான 2  பெண்கள்.

இராணிப்பேட்டை அருகே நெமிலியடுத்த ஜாகீர்தண்டலம் கண்டிகை பஸ்நிறுத்தத்தில் வேலைக்குச் செல்ல பஸ்ஸுக்கு காத்திருந்தவர்கள்மீது மினிவேன் மோதியதில் 2,பெண்கள் பலியானார்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஜாகீர்தண்டலம் கண்டிகையைச் சேர்ந்த லட்சுமி(63), அர்ச்சனா(26) இருவரும் ஸ்ரீ பெரும்புதூர்அருகே உள்ள கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தனர்.  இருவரும் வேலைக்குச்செல்ல நேற்று  பிற்பகல் அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் வழக்கம் போல   காத்திருந்தனர். அப்போது, வேகமாக வந்த மினி வேன்  எதிர்பாராதவிதமாக  மோதியது

இந்தவிபத்தில், அர்ச்சனா,லட்சுமி இருவருக்கும்  பலத்த காயம் ஏற்பட்டு அர்ச்சனா சம்பவ இடத்தலேயே உயிரிழந்தார். லட்சுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்தார். இது குறித்து  தகவலறிந்த நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான மினி வேன் டிரைவரைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News