பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
பானாவரம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலியானார்;
மின்சாரம் தாக்கி பலியான லைன்மேன் குமரேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த பானாவரம் அடுத்த மாகானிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த குமரேசன்(45),அவருக்கு தனலஷ்மி என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர்.
குமரேசன், பானாவரம் மின் வாரிய துணைமின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பானாவரம் அடுத்த கோடம்பாக்கத்தில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது, எனவே அங்கு கூட்டுறவு வங்கியின் பின்புறமுள்ள மின்மாற்றியில் பழுதை சரி. செய்யும் பணியில் குமரேசன், ரவி, ராஜா, காமராஜ் ஆகிய 4 பேரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். .
அப்போது குமரேசனின் உடல் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த பானாவரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.