பக்தோசிதப்பெருமாள் அமிர்தவள்ளி தாயார் திருக்கல்யாண உற்சவம்.
சோளிங்கரிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண உற்சவ வைபோகம் விமரிசையாக நடந்த்து.;
சோளிங்கர் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்
இராணிப்பேட்டை சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தமிழ்மாதமான ஒவ்வொரு ஐப்பசியில் மூலவரான பக்தோசிதப் பெருமாளுக்கும் உடனுறையான அமிர்தவள்ளித் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ விழா ஆண்டு தோறும் தடந்து வருவதுநடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி இந்த ஆண்டும் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் விழா தொடங்கியது. விழாவின் தொடக்கமாக காலை நடைதிறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசிதப்பெருமாள், அமிர்தவள்ளித்தாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து பல்லக்கில் சீர்வரிசை புறப்பாடு,சுவாமி காசியாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு விசேஷ நிகழ்ச்சியான பக்தோசிப்பெருமாள் அமிர்தவள்ளித்தாயார் திருக்கல்யாண வைபோக உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..