காவேரிப்பாக்கம் அருகே பாலாற்றில் அடித்துச்செல்லப்பட்ட 7 இளைஞர் மீட்பு

காவேரிப்பாக்கம் அருகே பாலாற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் 7 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.;

Update: 2021-11-14 17:25 GMT

காவேரிப்பாக்கம் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஏழு இளைஞர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே மாமண்டூரைச்சேர்ந்தவர்கள்சுதாகர்(18),நந்தகுமார்(18),சின்னராசு(18),விஸ்வநாதன்(20),சுபாஷ்(20), ரமேஷ்(20),கோகுல்(20) நண்பர்களான 7பேரும் சேர்ந்து மாமண்டூர் பாலாற்றில் புதியபாலம் அருகே  ஜாலியாக விளையாடி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் 7பேரும், திடீரென எதிர்பாராமல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நடு ஆற்றில்இருந்த பாறைத்திட்டைப்பிடித்து தப்பித்தனர் பின்னர் கரைக்குவரமுயற்சித்த அவர்கள் முடியாததால் அப்பகுதிவழி சென்றவர்களிடம் காப்பாற்றும்படி கூறியுள்ளனர்.

உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து இராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர் ,அரக்கோணம் தேசிய பேரிடர்மீட்பு படையினர் சேர்ந்து இளைஞர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் 7இளைஞர்கள் பாலாற்றில் அடித்துச்சென்று தத்தளித்து வருவது குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, ,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்த அமைச்சர்,மாவட்ட ஆட்சியர்,மற்றும் எஸ்பி ஆகியோர்  மீட்பு பணியைப் பார்வையிட்டு இளைஞர்களை பத்திரமாக மீட்க ஆலோசணைகளை வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து மீட்புப்படையினர் ஆற்றில் இரப்பர் படகு மூலம் சென்று தத்தளித்து இருந்த 7பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து அமைச்சர் காந்தி,கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன், எஸ்.பி. தீபாசத்தியன் ஆகியோர்சேர்ந்து மீட்கப்பட்ட  7பேரையும் வாழ்த்தியும் அறிவுரைகளை கூறி அனுப்பி  வைத்தனர்.

மேலும் ஆற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து 7இளைஞர்களை மீட்டுவந்த மீட்புபடையினரைப் பாராட்டி நன்றி கூறினர்.


Tags:    

Similar News