வேலைக்குப் போகும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

சோளிங்கரில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-08-10 12:21 GMT

சோளிங்கரில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மானியவிலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாரவளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம் (பைக்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், சோளிங்கர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் தலைமை வகித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) தனசேகரன் வரவேற்றார் .

நிகழ்ச்சிக்கு சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளான 16 பெண்களுக்கு ₹25 ஆயிரம் மானியத்தில் (பைக்) இருசக்கர வாகனங்களை வழங்கி தற்போதய திமுக ஆட்சியில் வழங்கப்படும் நலதிட்டங்கள் குறித்து பேசினார். 

நிகழ்ச்சிக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிழச்சியின் முடிவில் துணை வட்டார அலுவலர் லேனா தேவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News