சோளிங்கர் நகராட்சியில் வரி கட்டாமல் இருந்த 3 கடைகளுக்கு சீல்
நீண்ட நாட்களாக வாடகை மற்றும் வரி பாக்கி வைத்திருந்த 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் பரந்தாமன் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது;
சோளிங்கர் நகராட்சியில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.
சோளிங்கர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி, சொத்து வரி குடிநீர் கட்டணம், கடைகள், தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய கடைகள் சுங்கம் மற்றும் குத்தகை உள்ளிட்ட வைக்கு கட்டவேண்டிய வாடகை மற்றும் வரி நீண்ட நாள் செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சோளிங்கர் பேருந்து நிலையம், வாலாஜா ரோடு ஆகிய இடங்களில் நகராட்சி ஆணையர் பரந்தாமன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வாடகை மற்றும் வரி கட்டாமல் உள்ள கடைகளில் வசூலில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சிக்கு சொந்தமான குறிஞ்சி காம்ப்ளக்சில் 3 கடைகள் நீண்ட நாட்களாக வாடகை மற்றும் வரி பாக்கி செலுத்தாமல் இருந்ததால், 3 கடைகளுக்கும் நகராட்சி ஆணையர் பரந்தாமன் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.