சோளிங்கரில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய சோளிங்கர் காவல்துறை;

Update: 2021-06-03 06:15 GMT

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ஏதாவது ஒரு காரணம் கூறி வெளியே சுற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காவல்துறை எவ்வளவு கூறினாலும் அதனை கண்டுகொள்ளாமல் வெளியில் சுற்றுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில், சோளிங்கர் அரக்கோணம் கூட்டுரோடு அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி, அவர்கள் அத்தியாவசிய காரணத்திற்காக வந்திருந்தால் அவர்களை அனுமதித்தனர். 

காரணமின்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். 

Tags:    

Similar News