சோளிங்கர் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி பதவியேற்பு

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சோளிங்கர் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி, துணைத்தலைவராக பழனி ஆகியோர் பதவியேற்றனர்

Update: 2022-03-05 14:59 GMT

சோளிங்கர் நகராட்சி தலைவராக பதவியேற்ற தமிழ்செல்வி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது.

மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டிலும், அ.ம.மு.க மற்றும் காங்கிரஸ் தலா 4 வார்டிலும், பா.ம.க. 2 வார்டிலும், அ.தி.மு.க.ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர்கள் நகராட்சி வார்டு கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவருக்கான தேர்தல் ஆணையர் பரந்தாமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அ.தமிழ்ச்செல்வி நகராட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சோளிங்கரின் முதல் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி பதவியேற்றுக்கொண்டார்.

அதேபோல் துணைத் தலைவராக 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து நகராட்சியின் முதல் தலைவராக பதவியேற்றுக் கொண்ட தமிழ்செல்விக்கும் நகராட்சி துணைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பழனிக்கும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News