நெமிலியில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவப்பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வண்ணகோலங்கள் போடப்பட்டு மாவிலைத் தோரணங்கள் கட்டி அலுவலகம் விழாக்கோலம. பூண்டது.
விழாவில் ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார் அலுவலகப் பெண் ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகள் சேர்ந்து பாரம்பரியமிக்க கிராமிய ஆடல், பாடல்களைப்பாடி சமத்துவபொங்கல் விழாவை கொண்டாடினர்.
கோலாகலமாக நடந்த பொங்கல் விழாவில் அலுவலர்கள் ஊழியர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.