சோளிங்கர் யோகநரசிம்மசாமி கோயில் மலையில் ரோப்கார் சோதனை ஓட்டம்
சோளிங்கர் யோகநரசிம்மர் கோயில் மலையில் அமைக்கப்பட்டு வரும் ரோப்காரின் சோதனை ஓட்டம் நடந்தது.;
இராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ யோகநரசிம்மசாமி கோயில் 108திவ்ய தேசங்களில் ஒன்றானதாகும். அங்குள்ள பெரியமலையில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார் அதேபோல அருகில் உள்ள சின்ன மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி ஸ்ரீராமர், ரங்கநாதர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர் .
இந்நிலையில் பெரிமலைக்கோயில், 750அடிஉயரத்தில். 1305 படிக்கட்டுகளை கொண்டுள்ளது ஆகவே வயதானவர்கள்,குழந்தைகள்,மற்றும் நோயுற்றவர்களால் 1305படிக்கட்டுகளில் ஏறி சாமிதரிசனம் செய்வது மிகவும் கடினமானதால் வசதிபடைத்தவர்கள் டோலி வைத்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் வசதியில்லாதவர்கள் படிக்கு கீழேயே நின்று வணங்கிவிட்டுச் செல்கின்றனர் இதனால் பக்தர்கள் நீண்ட காலமாக யோகா நரசிம்ம சுவாமி மலைகோயிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்பேரில் கடந்த 2010ஆம்ஆண்டு ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பின்பு 2014ல் ₹9.30 கோடி மதிப்பில்திட்டம் துவங்கி தற்போதுவரை பல்வேறு பிரச்சனைகளால் ரோப் கார் அமைக்கும்பணிகள் கடந்த 11ஆண்டுகளாக தாமதப்பட்டு வந்துள்ளது, இது குறித்து அறிந்த இந்து அறந்நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த இருவாரங்களுக்கு முன்பாக நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர்செய்தியாளர்களிடம் பணிகள்விரைவுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நடப்பு ஆண்டு இறுதியில் ரோப்கார் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அறநிலைய அதிகாரிகள் பணிகள் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதிரி கேபினைப் பொருத்தி சோதனை ஓட்டம் நடந்தது அப்போது கோயில் செயல் அலுவலர் ஜெயா மற்றும் கோயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.