நாட்டு மாடுகளை வளர்த்து இயற்கை விவசாயம் செய்யலாம்: கலெக்டர் வேண்டுகோள்

காவேரிப்பாக்கம் அடுத்த கல்பலாம்பட்டில் வேளாண் கல்லூரி மாணவிகளின் களப்பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்

Update: 2022-01-06 16:06 GMT

நாட்டு மாடுகளை வளர்த்து இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்  என்றார் கலெக்டர்.

காவேரிப்பாக்கம் அடுத்த கல்பலாம் பட்டில் வேளாண் கல்லூரி மாணவி களின்  களப்பயிற்சி துவக்க நிகழ்ச்சியை  கலெக்டர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன்துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம்  ஊராட்சி ஒன்றியம் பெருவளையம் ஊராட்சியைச் சேர்ந்த கல்பலாம் பட்டு கிராமத்தில் அரக்கோணம்  அருகே உள்ள தான்போஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவிகள் சுமார் 60 நாட்கள் கிராமத்தில் வேளாண் குறித்த விவசாயிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் களப்பயிற்சி துவக்க நிகழ்ச்சி நடந்தது .

நிகழ்ச்சியில் ,கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன்,  இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் கால்நடைகளின் ஈடுபாடு மற்றும் கிராம மக்களின் பொருளாதார மேம்பாடு குறித்தும் வேளாண் பொருட்களை உற்பத்தி பற்றிய படவிளக்கங்களை பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்: பழங்காலங்களில் நம் முன்னோர்கள் ,விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர் இயற்கை இயற்கை விவசாயத்தை அதிகளவில் செய்துவந்தனர் விவசாயம் கால்நடைகள் வளர்ப்புமட்டுமே மனிதனின் பொருளாதார வளர்ச்சியாகும் அதனைச் சுற்றியே வேளாண்மை சிறந்து விளங்கி வந்தது .அப்போது ,கிராம பகுதிகளில் அதிக அளவு இயற்கை விவசாயமும் நாட்டு மாடுகள் இருந்தது.

ஆனால் ,தற்போது இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் அழிக்கப்பட்டதின் விளைவாக விவசாயம் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. மேலும் ,மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவுத் தேவையை அதிகரிக்க அரசு பல்வேறு வகையில் விவசாயத்தை வளர்த்து வருகிறது .

இருப்பினும் , பல்வேறு கிராமங்களில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்றால் புதிய வகை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திட வேண்டும் வேளாண்மை துறை அலுவலர்கள் அதற்கான பல்வேறு செயல்பாடுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர்.எனவே விவசாயிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல அரசு இயற்கை விவசாயத்திற்கு அதிகளவில் ஆதரவு அளித்து வருகிறது. ஆகவே ,அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் நாட்டு மாடுகளை அதிகளவில் வளர்க்க வேண்டும்.நெல் ,தோட்டப்பயிர்கள் பயிரிடலாம் கூட்டு பண்ணையம் மூலம் விவசாயம் செய்வதை விவசாயிகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் வேளாண் துணை இயக்குனர்கள் விசுவநாதன் சீனி ராஜ் ஆல்பர்ட் ராபின்சன் கல்லூரி முதல்வர் சேகர் வேளாண் அலுவலர்கள் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News