சிறப்பான காவல் நிலையத்திற்கு சான்றிதழ்: இராணிப்பேட்டை எஸ்பி ஆய்வு
ரத்தினகிரி, அவளூர், அரக்கோணம் மகளிர் காவல் நிலையங்களில் இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரத்தினிரி, அவளூர், மற்றும் அரக்கோணம் மகளிர் காவல் நிலையம் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட நிலையத்திற்கு, வேலூர் சரக டிஐஜி பாபு ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்க உள்ளார்.
ஆய்வுகளில், காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் சுற்றுபுறத்தூய்மை அலுவலகப் பதிவேடுகள் பராமரிப்பு, குற்ற ஆவணங்களில் முறையாக வழக்கு நிலுவைகள் முடித்தவை, குற்ற விசாரணைகள் , பதிவுகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவைகள், குற்ற நிகழ்வுகள் தடுப்பு நடவடிக்கை அறிக்கை, காவலர்கள், பொதுமக்கள் இடையேயான நல் உறவுகள், விசாரணை நடவடிக்கைகள், கோப்பு கையாளும் முறை, ரோந்துப்பணிகள், காவல்நிலைய எல்லை குறித்த விபரம் மற்றும் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களின் விபரம் மற்றும் வாழ்வியல் விபரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்யப்படுள்ளது. பின்னர், சிறப்பான காவல் நிலையத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
அதற்கு முன்பாக, இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்தியன், அவளூர், அரக்கோணம் மகளிர் காவல் நிலையம், ரத்தினகிரி காவல் நிலையங்ளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.