முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதாரப் பெட்டகம்: ரெட்கிராஸ் வழங்கியது

மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை இராணிப்பேட்டை ரெட்கிராஸ் வழங்கியது.

Update: 2021-12-02 16:22 GMT

முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை வழங்கும் ரெட்கிராஸ் அமைப்பு  

இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் மழைவெள்ளத்தால. பாதிக்கப.பட்ட மக்களுக்கு 600சுகாதாரப் பெட்டகம் வழங்கப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக 40 பெட்டகங்களை மேலபுலம்புதூர் அரசு தொடக்கப்பள்ளி முகாமில் உள்ள 40 இருளர் குடும்பங்க ளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் கலந்து கொண்டு்  பெட்டகம் வழங்கி பேசுகையில், இந்திய ரெட் கிராஸ் அமைப்பானது பேரிடர் காலங்களில் அனைத்து உயிர்களையும் காப்பாற்றக்கூடிய ஓர் அமைப்பாகும். இது ஒருகட்சி சார்பற்று உலக முழுவதும் சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டது. 

சேவை நோக்கத்தோடு  இருந்து  மாவட்டம் முழுவதும்  மழைவெள்ளத்தில்  பொதுமக்கள்   பாதிக்கப்பட்டுள்ள  இடங்களுக்கே சென்று சேவை செய்து வருகிறது. அந்த வகையில் சுகாதாரப்பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து ,மேலபுலம்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்துள்ளதால்    குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள்   மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். உடனே அங்கு சென்று அனைத்தையும் பார்வையிட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக  அவர்களிடம் கூறினார்.

நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் லஷ்மணன், பொருளாளர் சீனிவாசன், செயலாளர் ரகுநாதன், நெமிலி வட்டாட்சியர் ரவி மற்றும் மேலபுலம்புதூர் ஊராட்சிமன்றத் தலைவர் அனிதா ஆகியார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News