அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: ராமதாஸ்
அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அரக்கோணம் கூட்டத்தில் ராமதாஸ் கூறினார்
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி வைத்து தற்போது களம் காண்கிறது. இதனைத்தொடர்ந்து அரக்கோணம் அருகே நெமிலி பேருந்து நிலையத்தில் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு ரவி, சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் அ.மா கிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசும்போது, தமிழக தாய்மார்களுக்கு தமிழகஅரசின் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை நிச்சயமாக அரசு வழங்கும். மேலும் பெண்களுக்கு வாஷிங் மெஷின் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய மாவட்டம் அரியலூர் 3 மாவட்டமாக பிரித்தது நாங்கள்தான். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கொரோனா என்ற கொடிய நோயால் ஒரு வருட காலம் வெளியே வராமல் இருந்தேன். தற்போது 10 நாட்களாக வெளியே வந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடன் எப்பொழுதும் ஒரு மருத்துவர் கூட இருக்கிறார். காரை விட்டு இறங்க வேண்டாம் என அன்புமணி கூறியதால் உங்களிடம் வந்து பேச முடியவில்லை. அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ வெற்றி பெற்றால், முதல்வர் எடப்பாடியிடம் பேசி அவருக்கு அமைச்சர் பதவி வாங்கி தருவேன். நான் சொன்னால் முதல்வர் கேட்பார். நாங்கள் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என தெரிவித்தார்