சமூக இடைவெளியா? கிலோ என்ன விலை எனக் கேட்கும் புலிவலம் வார சந்தை
புலிவலம் வார சந்தையில் பொதுமக்களும் வியாபாரிகளும் முகக்கவசம் இன்றி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால், கொரோனா பரவும் அபாயம்;
சமூக இடைவெளியுமின்றி, முகக்கவசமும் இன்றி சந்தையில் கூடிய பொதுமக்கள்
சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் வெள்ளிதோறும் மாலையில் வாரசந்தை நடைபெறும். சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று நடந்த வார சந்தையில், வியாபாரிகளும் சரி, பொதுமக்களும் சரி, யாரும் முகக்கவசமும் அணியவில்லை, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை. சந்தையில், சமூக இடைவெளி கிலோ எவ்வளவு, முகக்கவசம் கூறு எவ்வளவு என்பதுபோல் வந்திருந்தனர்.
அரசு எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும், கொரோனா விதிமுறைகளை தேர்தல் பிரசாரத்தில் அரசியல்வாதிகளும் கடைபிடிக்கவில்லை. கூடும் இடங்களில் மக்களும் கடைப்பிடிப்பதில்லை.