சோளிங்கர் நகராட்சி வார்டுகள் மறு வரையறை: பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
சோளிங்கரில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது;
சோளிங்கர் கோவில்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியை கடந்த நவம்பர் 1ந்தேதி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது . அதனைத் தொடர்ந்து கூடுதலாக வார்டுகள் உருவாக்கப்பட்டு சோளிங்கர் நகராட்சியாக செயல்பட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வரையறை செய்யப்பட்ட 27 வார்டுகள் விபரம் பட்டியலாக நகராட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்வதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் இன்று காலை சோளிங்கர் -வாலாஜா சாலையில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது
கூட்டத்தில் ,பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், மற்றும் சமூக ஆரவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.