சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் வரையறை பொதுமக்கள் ஏற்பு .
சோளிங்கர் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வார்டுகள் வரையறை ஏற்கப்பட்டது;
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியீடானது.அதனைத்தொடர்ந்து சோளிங்கர், நகராட்சியாக செயல்பட ஆணையர் நியமிக்கப்பட்டு 18வார்டுகளிலிருந்து 27வார்டுகளாக அதிகரித்து நகர எல்லை மற்றும் வார்டுகள் வரையறைப் பணிகள் நடந்தன. பின்னர் ,27 வார்டுகள் வரையறை செய்யப்பட்டு பட்டியலை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில் ,சோளிங்கர.-வாலாஜா சாலையில். வாசவி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் வார்டுகள் மறுவரையறைக் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சில அதிருப்திகள் எழுந்த போதிலும், பெரும்பாலானோர் வரையறைகளை ஏற்றுக்கொண்டனர். மேலும் 6 வார்டில் மட்டும் சில திருத்தங்கள் செய்யுமாறு பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் மண்டல இயக்குநர் நகராட்சிகள் குபேந்திரன், நகராட்சி் ஆணையர் பரசுராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியளர் உள்ளாட்சி தேர்தல் மரியம் ரெஜினா, வட்டாட்சியர் வெற்றிக்குமார் உட்பட பொதுமக்கள் பலர. கலந்து கொண்டனர்.