காவேரிப்பாக்கத்தில் வேளாண்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள்

காவேரிப்பாக்கம் வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பயிர் திட்ட ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2021-08-04 04:35 GMT

காவேரிப்பாக்கம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில்,  வட்டார வேளாண்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை (அட்மா) மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் திட்டம் குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு உதவிஇயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார் , துணை அலுவலர் சேகர் வரவேற்றார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பசுபதி நுண்ணீர் பாசனம் குறித்து பேசினார். தேசிய மானாவாரி மேம்பாட்டுதிட்டம், அட்மா திட்டம் மற்றும் பண்ணைப்பள்ளிகள் நடத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது .

கூட்டத்தில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News