இருவேறு இடங்களில் மின்னல் தாக்கி ஒருவர்பலி: மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்

Update: 2021-10-29 16:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடிதாக்கி ஒருவர்பலி மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது . இந்நிலையில், சோளிங்கர் அடுத்த பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பூங்காவனம் (50)என்பவர் அங்குள்ள உள்ள ஏரியில் மாடு மேய்த்து கொண்டிருந்ததார்.

அப்போது பயங்கரசப்தத்துடன் இடி இடித்து பூங்காவனத்தை  மின்னல்   தாக்கியது.அதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர..

இதேபோல   சோளிங்கர் அடுத்த புதூர் மேடு அருகே  நடந்த மற்றொரு சம்பவத்தில்,  மித்தநத்தம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணா (40) என்பவர் மீது  மின்னல் தாக்கியது .இதில் படுகாயமடைந்த அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். சோளிங்கர் பகுதியை சுற்றிஒரே நாளில் இரு வெவ்வேறு இடங்களில் இடி தாக்கிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சோளிங்கர் அருகே மழையின் போது அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்துக்குள்ளானது. அதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் விபத்து குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News