காவேரிப்பாக்கத்தில் புதியபேருந்து நிலையம்.

காவேரிப்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தை காணொளிமுலம் முதல்வர்திறந்து வைத்தார்.;

Update: 2021-12-08 09:58 GMT

காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடங்கி வைக்கும் கலெக்டர்

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தேர்வுநிலைப் பேரூராட்சியில் பேருந்து நிலையம் நவீன மயமாக்குதல் மூலதன மானியத்தின் கீழ் ரூ,3.கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப் பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஸடாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சோளிங்கர் எம.எல்.ஏ முனிரத்தினம், வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய், மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயந்தி காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவர் அனிதா, காவேரிப்பாக்கம் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் சக்தி.ஆகி யோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News