கல்வி மத்திய பட்டியலில் உள்ளதால் நீட் ரத்து செய்ய முடியவில்லை:அன்புமணி ராமதாஸ்

காவேரிப்பாக்கம் சுமைதாங்கியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரகூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

Update: 2021-10-02 15:35 GMT

 காவேரிபாக்கம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 

கல்வி மத்திய பட்டியலில் உள்ளதால் நீட் தேர்வு   ரத்து செய்ய  முடியவில்லை என்றார்அன்புமணி ராமதாஸ் .

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பாமக வேட்பாளர்கள் ஆதரவு தேர்தல் பிரச்சாரகூட்டத்தில்  இளைஞர்.தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் இதைத் தெரிவித்தார். இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கியில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கும் ஊரக உள்ளாட.சி தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவு பிரசார கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர்நல்லூர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் வேடபாளர்களை ஆதரித்து பேசியதாவது:பாமத தலைவர் மருத்துவர் ராமதாஸ் தன் வாழ்க்கையின் பாதி நாட்களை சமூதாய வளர்ச்சிக்காக 42ஆண்டுகள் சமூக நீதிக்காகவும்  இடஒதுக்கீடு போராட்டங்கள்  1000க்கும் மேற்பட்டவற்றை   நடத்தியுள்ளார். தற்போதும் சமுதாய வளர்ச்சிக்காகவே போராடி வருகிறார்.அதற்காகவே ஒரே நாளில் 21 பேர் உயிர்தியாகம் செய்தனர்.

அதன் காரணமாகவே, யாராலும் நீக்க முடியாத 10.5சத இட ஒதுக்கீடு பெற்றோம்.  அதனாலேயே இன்றைக்கு திமுகவும் அதிமுகவும் சமூக நீதிக்கு ஆதரவளிக்கிறது. பாமக கிராம மக்களின் கட்சியாகும். கிராமமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் சமுதாய வளர்ச்சியில் மாற்றமில்லை . அதனால் மாற்றம், முன்னேற்றம் என்பதை பாமக முன்னெடுத்து வருகிறது.

சமுதாயத்தில் , சமூக வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டு வருவோம் . காந்தி பிறந்தநாளான இன்று அவர்ஆதரித்து தெரிவித்த சுயராஜ்யம் தான் இன்றைக்கு தேவை. இது கிராமங்களில் தான் உள்ளது.ஜனநாயகத்தின் அடித்தளம் உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற, பாராளுமன்றத்தை விட கிராமசபை வலிமையானது .

ஆகவே, நல்லவர்களையும் வலிமையானவர்களையும் தேர்வு செய்யுங்கள் கடந்த முறை உள்ளாட்சித்தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம் அவர்கள் 25 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் கொடுத்தார்கள் அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அதனால் தான் நாம் தற்போது தனித்து போட்டியிடுகிறோம்.

அரை நூற்றாண்டு காலம் உழைத்து தான் ஸ்டாலின் அவர் முதல்வர் கனவை நனவாக்கினார் .அதை போல் பாமகவும் தனது கனவை நனவாக்க தற்போது பாடுபடுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தை பாமக தான் போராடி பெற்று தந்தது. சட்டமன்றத்தில் கச்சதீவை மீட்க 1500 முறை தீர்மானம் நிறைவேற்றியும் அதையும் நிறைவேற்றவில்லை. மாநில சுயாட்சியை அண்ணா கோரிக்கை வைத்தார். அது நியாயமானது தான்.அதனால் தான் பாமக அக்கோரிக்கையை வரவேற்கிறது. கிராம ஊராட்சிகளின் அதிகாரம் சென்னையில் குவிந்துள்ளது. மாநிலங்களின் அதிகாரம் டெல்லியில் குவிந்துள்ளது .மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று நீட் தேர்வு பிரச்னை வந்திருக்காது.

இது கிராமபுற ஏழை மாணவர்களுக்கும் சமூகநீதிக்கும் எதிரானதாகும். அனைத்து சமுதாயத்திற்கும் தனி இட ஒதுக்கீடு தேவை என பாமகமட்டுமே போராடி வருகிறது .ஆகவே தேர்தலில் போட்டியிடும் அனைத்து பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து, இராணிப்பேட்டை மாவட்டத்தின் மாவட்ட உள்ளாட்சி தலைவர் பொறுப்பை கைப்பற்ற பாடுபடவேண்டும் என்றார் .

முன்னதாக  கொரோனா விதிகளை  அனைவரும் மதிக்க வேண்டும் தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நோய்தொற்றைத் தவிர்க்க அரசுவிதிகளான முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று கூட்டத்தில் இருந்த அனைவரிடமும் கூறினார் .அதன்பேரில் அணியாத சிலர் முக்க்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்தனர்.

Tags:    

Similar News