மர்மநபர்கள் கோயிலில் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு
காவேரிப்பாக்கம் அருகே கோயிலில் புகுந்து சாமிசிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.;
கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டு தரையில் இருக்கும் காட்சி
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டில்உள்ள நவதுர்கையம்மன. கோயில் உள்ளது . இக்கோயிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பக்தர் ஒருவர் வழக்கம் போல சாமிகும்பிட கோயிலுக்கு சென்றார். அப்போது கோயில் கதவுகள் திறந்த நிலையில் பலிப்பீடத்திற்கு அருகே நட்டிருந்த திரிசூலத்தை சேதப்படுத்தப்பட்டு மற்றும் பிரகாரத்தில் உள்ள நவகிரக சிலைகள் உடைந்த நிலையில் கீழே சிதறி கிடந்துள்ளது.
அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அவர் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.
நவதுர்கையம்மன. கோயிலில் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது