சித்தஞ்சியில் குடும்ப தகராறில் மகளை கொலை செய்து தாயும் தற்கொலை

ஓச்சேரி அடுத்த சித்தஞ்சியில் கணவன்,மனைவி தகராறில் மகளை தூக்கிட்டு கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-07-31 07:31 GMT

ஓச்சேரி அருகே மகளை கொன்று தாயும் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த நடு சித்தஞ்சி எல்லையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த தயாளன்,அவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு  5வயதில் கீர்த்தி என்ற மகனும், 3,வயதில் ஹரிதா என்ற மகளும் உள்ளனர.

இந்நிலையில் , தயாளன் தினமும் குடித்துவிட்டு வெண்ணிலாவை அடித்தும் தகாத வார்த்தையால் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. தயாளன் அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு உள்ளே வந்து போதையில் வெண்ணிலாவைத் தகாத வார்த்தை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுபட்டுசண்டை போட்டுள்ளார். பின்னர் ,அவர் நிலத்திற்கு சென்று விட்டார். 

அப்போது, வீட்டிருந்த வெண்ணிலா, மாமியார் தாயம்மாள் வீட்டின் வெளியே திண்ணையில் படுத்திருந்ததையறிந்து மகன் கீர்த்தியை‌ நாற்காலியில் கட்டிப் போட்டு விட்டு பின்புறம் உள்ள புங்கை மரத்தில் மகள் ஹரிதாவை தூக்கிட்டு கொலை செய்த பின்பு, அவரும் அதே துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மரத்தில் தொங்கிய  இருவரது உடல்களையும் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில்ஓடி வந்து மீட்டு தாய்,மகள் இருவரது சடலங்களை மீட்டனர். பின்னர், அவளூர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . பின்பு,போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்,தயாளன் வெண்ணிலா இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால்  போலீஸார் அரக்கோணம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

காவேரிப்பாக்கம் அருகே கணவனின்குடி பழக்கம் காரணமாக மகளை தூக்கிட்டு கொலை செய்து, தானும் தூக்கிட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..

Tags:    

Similar News