விவசாயிகள், வியாபாரிகள் பணம்தான் பறிமுதல் செய்யபடுகிறது: கே.எஸ்.அழகிரி
ஆளுங்கட்சியினர் பணம் கொண்டு செல்லும்போது காவல்துறை விடுமுறை எடுப்பதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினர்.;
சோளிங்கரில் மதசார்பற்ற கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த இரண்டு தேர்தல்களில் தேர்தல் ஆணையம் நடைமுறையில் தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யக் கூடிய பணங்கள் அனைத்தும் விவசாயிகள், வியாபாரிகள் பணமாகவே இருக்கிறது. ஆளுங்கட்சியின் பணத்தை பிடிப்பதில்லை. ஆளுங்கட்சி பணத்தைக் கொண்டு செல்லும் போது காவல்துறை விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும், பணம் எல்லா இடங்களிலும் ஆறாக கொண்டு செல்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என அவர் கூறினார்.