சோளிங்கரில் ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பு
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.;
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது
அதில் சோளிங்கர் ஒன்றியத்தில் 379 பதவிகள் உள்ளது அதில் 2 மாவட்ட கவுன்சிலர், 19 ஒன்றிய கவுன்சிலர், 40 கிராம தலைவர் மற்றும் 318 கிராம வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளது . அதில், சோளிங்கர் ஒன்றியத்தைச் சேர்ந்த 40பஞ். தலைவர், 318 பஞ். வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தலைவர் , உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது .
அதேபோல ,சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நெமிலி உள்வட்ட உதவிசெயற் பொறியாளர் அரிகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. அதில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களாக வெற்றிபெற்ற திமுக கூட்டணி, அதிமுக மற்றும் பாமகவைச் சேர்ந்தவர்கள் 19 பேரும் பதவியேற்றுக் கொண்டனர் .
நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்