செம்பேடு கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு
காவேரிப்பாக்கம் பாலாற்றில் நடந்து வரும் செம்பேடு கூட்டு குடிநீர்திட்டப் பணிகளை தமிழக குடிநீர்,வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம், அரக்கோணம் மற்றும் சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 11ஊராட்சிகளுக்கு உட்பட்ட 88 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க ரூ 45.30கோடி,மதிப்பில் செம்பேடு கூட்டு குடிநீர் திட்டம் என்றப்பெயரில் அறிவிக்கப்பட்டது..
அதனைத்தொடர்ந்து காவேரிப்பாக்கம் அடுத்த வாலாஜா தாலூக்காவைச் சேர்ந்த திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் , மாநில குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பணிகள் நடந்து வரும் திருப்பாற்கடல் பாலாற்றுப் பகுதிக்கு வந்து பணிகளை பார்வையிட்டார்.
அதில் ஆற்றில் உறைக்கிணறுகள் தேக்கத்தொட்டி, பைப்லைன் சப்ளை ஆகியவற்றில் நடந்து வரும் .பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் திருப்பாற்கடல், அத்திப்பட்டு மற்றும் சுமைதாங்கி ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
ஆய்வின் போது, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன்,, ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் ஆன்ந்தராஜ்,, திட்டஇயக்குநர் முகமை லோகநாயகி, குடிநீர் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் ரவீந்தரன், உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்