பொதுமக்கள் அதிக அளவு வருவதால் சுற்றுலாத்தலமான மகேந்திரவாடி ஏரி.

.ஏரியிலிருந்து வெளியேறும் நீரில் குளிக்க மக்கள் அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்;

Update: 2021-11-05 23:30 GMT

பொதுமக்கள் அதிக அளவு வருவதால் சுற்றுலாத்தலமான மகேந்திரவாடி ஏரி.

சோளிங்கர் அடுத்துள்ள மகேந்திரவாடி ஏரிக்கடவாசல் பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் தண்ணீரை பார்த்து  மகிழ்ந்து  வருவதால் சுற்றுலாத்தலமாக  காட்சியளித்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி ஏரி கடந்த 10 ஆண்டுகளாக வறன்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக  பெய்து வரும் தொடர்மழையால்  பாலாற்றில் நீர்வரத்து  ஏற்பட்டு வருகிறது..இதனால்,    வாலாஜாவில் உள்ள பாலாறு அணைக்கட்டில்   இருந்து கால்வாய் வழியாக  மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஏரி‌யின் முழு கொள்ளளவையடைந்து நிரம்பிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக உபரிநீர் அதன் கடை வாசல் வழியாக வெளியேறி வருகிறது.ஏரியிலிருந்து நீர் வெளியேறும் காட்சியை பார்த்து ரசித்து குளிக்க மக்கள் அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக திரண்டு  பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

மேலும் ,தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறையைத் தொடர்ந்து மகேந்திரவாடி, பாணாவரம், கூத்தம்பாக்கம், குப்பக்கல் மேடு ,கீழவீதி, வெளிதங்கிபுரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில்  குடும்பத்துடன்  கூடி  புகைப்படம் எடுத்தும் தண்ணீரில் குளித்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து தினசரி அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக மக்கள் அதிகம் காணப்படுவதால் மகேந்திரவாடி ஏரிப்பகுதி ஒரு சுற்றுலாத் தலமாக காட்சியளிக்கிறது.இந்த ஏரியானது பத்தாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். சான்றாக அவர்கள் அமைத்த குடவரைக்கோயில் அங்குஉள்ளது என்பது    குறிப்பிடத்தக்கதாகும்.


Tags:    

Similar News