மழையில் குடிசைகள் இழந்து அவதியுரும் இருளர் இன மக்கள்
காவேரிப்பாக்கம் அடுத்த அவளுரில் இருளர்இன மக்கள் மழையில் குடிசைகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அவளூர் தோப்புக்காணிப்பகுதியில் உள்ள பெரும்புலிபாக்கம், தாமல் ஏரிச்செல்லும் கால்வாய் கரையோரப்பகுதிகளில் சுமார் கடந்த 30 ஆண்டுகளாக இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 20 மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
அவர்கள் ,அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்தும், மரம் வெட்டும் வேலை உள்ளிட்ட கூலிவேலைகளை செய்தும் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் குடும்ப அட்டை மட்டும் பெற்றுள்ளனர். அடிப்படை வசதிகளின்றி இருந்து வரும் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக வே்லூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டாட்சியர் கோட்டாட்சியர்களிடம் கோரிக்கை மனு அளித்துஅதிகாரிகள் இது வரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
இந்நிலையில் , கடந்த சிலநாட்களாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையில் பெரும்புலிபாக்கம், தாமல் கால்வாய்களில் வெள்ள பெருக்கு அதிகமானது. இதன் காரணமாக கரையோரமுள்ள குடிசைப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. அதில், குடிசைகளின் மண்சுவர்கள் ஊறி சரிந்து இடிந்து விழுந்தன .இதனால் வீடுகளின்றி நிர்கதியாக அவதியுற்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தந்த தகவலின் பேரில் அவளூர் விஏஓ முருகளன் அவர்களனைவரையும. முகாமில் தங்க வைத்துள்ளார். மேலும் தகவலறிந்த ஆர்ஐ சுபகலா பிரியா, நெமிலி வட்டாட்சியர் ரவி அங்கு விரைந்து அவர்களுக்கான உணவு வசதிகளைக் கேட்டறிந்து ஏற்பாடுகள் செய்தனர் .
இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர் கூறியதாவது; நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக 20க்குமேற்பட்ட குடும்பத்தினர். மக்லின் கால்வாய் ஓரமாக குடிசைகளைப் போட்டு கூலிவேலை செய்து ஏழ்மை நிலையில் வசித்து வருகிறோம்.
சாதிச்சான்று வழங்கக் கோரியும் வீடு மற்றும் வசதிகள் கேட்டு கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த 15ஆண்டடுகளாக கோரிக்கை வைத்து அலைந்து வருகிறோம். ஆனால் இதுவரை யாருமே எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே வாழ்வாதாரமின்றி வீடுகளிழந்து தவித்து வரும் எங்களது கோரிக்கையை இப்போதாவது நிறைவேற்றிட வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.