பிறந்து சிலநாட்களே ஆன ஆண்சிசு சூட்கேசில்வைத்து வீசப்பட்டிருக்கும் அவலம்
பாணாவரம் அருகே தப்பூரில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பிறந்து சிலநாட்களேயான ஆண் சிசு இருந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்;
பானாவரம் அருகே சூட்கேசில் கிடந்த சிசு
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே தப்பூர் ஏரிக்கலாவாய் கரையில் கேட்பாரற்று மூடிய நிலையில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் அதனைக்கண்டு சந்தேகித்து சூட்கேசை திறந்து பார்த்துள்ளனா்.
அப்போது சூட்கேசில் உயிருடன் பிறந்து சில நாட்களே ஆண் சிசு துணிகளுடன் இருந்துள்ளது. இதனைக்கண்டவர்கள் உடனே அவ்வூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்
தகவலறிந்த , கிராம நிர்வாக அலுவலர் சுமன் சம்ப இடத்துக்கு விரைந்து குழந்தையை பத்திரமாக மீட்டு, பாணாவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு குழந்தையின் கை மற்றும் கால் ரேகைகளை செவிலியர்கள் பதிவு செய்து முதலுதவி அளித்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த சைல்டு ஹல்ப்லைன் குழுவினரிடம் , பாணாவரம்போலீசார் முன்னிலையில் ஆண் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது
மேலும் பாணாவரம் போலீசார் பச்சிளங்குழந்தையை சூட்கேசில் வைத்து வீசிச்சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.