சயனபுரம் வழியாக பேருந்து வசதி: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

நெமிலி ஒன்றியம் வேப்பேரி ,சயனபுரம் ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டங்களில் பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப் பட்டது;

Update: 2021-12-11 02:42 GMT
சயனபுரம் வழியாக பேருந்து வசதி: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

மாதிரி படம் 

  • whatsapp icon

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலிய ஒன்றியத்தைச் சேர்ந்த சயனபுரம் வேப்பேரி கிராமங்களில் சிறப்பு கிராமசபாக்கூட்டம் நடைபெற்றது. 

வேப்பேரியில் ஊராட்சி மன்றத் தலைவர். கீதா தலைமையில் வஜ்வந்தி மேற்பார்வையில் துணைத்தலைவர் நவநீதம்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2022-23க்கான கிராம வளர்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமத்தில் கால்நடை வளர்ப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கோரிக்கையின் படி புதிய கால்நடை மருந்தகம் அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, சயனபுரம் கிராமசபாவில் ஊராட்சி மன்றத்தலைவர் பவானி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகன்யா அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் சயனபுரம் வழியாக அரக்கோணத்திற்கு பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும்.  புதிய அரசுதிட்டங்களை கிராமத்திற்கு கொண்டு வரவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இரு  கிராமசபா கூட்டங்களிலும் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், ஒன்றிய உறுப்பினர் கிருஷ்ணவேணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News