சோளிங்கரில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் மாயம். தந்தை போலீஸில் புகார்
சோளிங்கரில் வெளியில் சென்று வருவதாகச்சென்ற பெண் வீடு திரும்பவில்லை என தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்
இராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர் பகுதியைச்சேர்ந்தவர் சரவணன், அவரது மகள் 27வயது பெண், கடந்த 2நாட்களுக்கு முன் வெளியே சென்று வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்பு, அவர் வீடு திரும்பவில்லை இதனால் பயந்து போன பெண்ணின் பெற்றோர் அவரைத்தேடி வந்துள்ளனர். எங்கும்தேடி கிடைக்காத நிலையில் அவரது தந்தை போலீஸில் அளித்ததார்.
புகாரின் பேரில் சோளிங்கர் போலீஸார் வழக்குபதிந்து காணாமல் போன பெண்ணைத் தேடி வருகின்றனர்.