காவேரிப்பாக்கம் அருகே போலி மதுபானம் தயாரித்து வரும் கும்பல் கைது

காவேரிப்பாக்கம் அடுத்து களத்தூரில் தேக்குமரத்தோப்பில் போலி மதுபானம் தயாரித்த கும்பலை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்

Update: 2021-08-12 03:47 GMT

காவேரிப்பாக்கம் அருகே போலி மதுபானம் தயாரித்து வரும் கும்பல் கைது

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூரிலிருந்து களத்தூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தேக்குமரத் தோப்பில் சந்தேகப்படும் வித்த்தில் ஆட்கள் வந்து செல்வதாக அவளூர் போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸார் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அங்கிருந்த கும்பல் தப்பியோடினர்.

ஆயினும் ,போலீஸார்  சோதனையிட்டு பதுக்கி வைத்திருந்த 452 போலி மதுபாட்டில்களை மற்றும் பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட கார் மற்றும்  உள்ளூர் பைக்கை பறிமுதல் செய்து அவளூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதனைத்தொடர்ந்து,  மாவட்ட எஸ்பி தேஷ்முக்சேகர்சஞ்சய் உத்தரவிட்டதின் பேரில் அரக்கோணம் டிஎஸ்பி மேற்பார்வையில்  இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் பைக் உரிமையாளரான மாமண்டூரைச் சேர்ந்த அன்பரசுவைப் பிடித்து விசாரித்ததில் அவரது நண்பர்களான ஓச்சேரியைச்சேர்ந்த விக்கி மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்தகண்ணன் (எ) செந்தாமரைக்கண்ணன் மற்றும் கடலூரைச் சேர்ந்த சற்குணம் ஆகியோரைக் கைது செய்து தனிப்படையினர் தொடர்வி சாரணையில் ஈடுபட்டனர்.

அதில் கண்ணன் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதேபகுதியைச் சேர்ந்த பச்சையப்பனுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் போலி மதுபாட்டில் தயார் செய்யபட்டு மதுபானக் கடைகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் போலிமதுபானம், எரிசாராயக்கேன்கள், மூடிகள், இயந்திரம்,கலர் பவுடர்கள் மற்றும் எஸன்ஸ் பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர் பின்னர், அன்பரசன், விக்கி,கண்ணன்(எ)செந்தாமரைக்கண்ணன், குமார் ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News