நெமிலியருகே டிரைவரைகொலை செய்த தந்தை, மகன் உட்பட 5 பேர் கைது

நெமிலியடுத்த சிறுவளையத்தில் காதல் தகராறில் ஜேசிபி டிரைவரை அடித்துக்கொன்ற தந்தை, மகன் உட்பட5 பேரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2021-12-18 13:22 GMT
நெமிலியருகே டிரைவரைகொலை செய்த தந்தை, மகன் உட்பட 5 பேர் கைது

நெமிலி அருகே ஜேசிபி டிரைவர் கொலைவழக்கில் கைதானவர்கள்

  • whatsapp icon

இராணிப்பேட்டை நெமிலியடுத்த மகேந்திரவாடியைச் சேர்ந்த சக்திவேல்(22) ,ஜேசிபி வைத்து ஓட்டிவந்த இவர்., அதே ஊரைச்சேர்ந்த அருள் என்பவரின் மகள்அனிதாவை காதலித்து வந்து   பிரச்சினை காரணமாக. அனிதா கடந்தவருடம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது..

அதனால் சக்திவேல்,அருள் இருவருக்கும்இடையே அடிக்கடித் தகராறுஏற்பட்டு வந்தநிலையில் சக்திவேல் ஜேசிபி மூலம் அருள் வீட்டின் காம்பௌண்டை இடித்ததால்   ஆத்திரமடைந்த அருள் ,அவரது ,மகன் தினேஷ் ,  உட்பட 5 பேர் சேர்ந்து சக்திவேலைத் தாக்க    முயன்றபோது  தப்பித்த சக்திவேலை விரட்டி சென்று சிறுவளையத்தில் மடக்கி தாக்கியுள்ளனர். அதில் ,பலத்த காயமடைந்த சக்திவேலை  சிகிச்சைக்கு வாலாஜா அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல்சிகிச்சைக்கு வேலூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார் .

இது குறித்து நெமிலிப் போலீஸார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்தநிலையில் அருள், தினேஷ், சதீஷ், கலையரசன்,நந்தகுமார் ஆகிய 5,பேரைக்கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இதற்கிடையே கொலைச் சம்பவத்தில் மேலும் 2 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்யவேண்டு மென கொலையுண்ட சக்திவேலின் உறவினர்கள் நெமிலி-பாணாவரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீஸார் அங்கு வந்து மறியலைக் கைவிடுமாறு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அதில் உடன்பட்டு மறியலைக்  கைவிட்டனர்.

Tags:    

Similar News