நெமிலி பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெமிலி பகுதியில் கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்;
நெல் கொள்முதல் செய்யப்படாததால், நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடை செய்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தனியார் வியாபாரிகள் மிகவும் குறைவான விலைக்கே கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலுமுள்ள கொள்முதல் நிலையங்களில் 27 அரசு கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவிட்டார்.
அப்படியிருந்தும் இதுவரை அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறினர். நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.