அனுமதியின்றி மது பார் நடத்தியவர் கைது

பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூரில் அரசு அனுமதியின்றி பார் நடத்தியதாக முதியவரைப் போலீஸார் கைது செய்தனர்;

Update: 2021-12-14 14:44 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் அண்ணா நகரைச்சேர்ந்தவர் காந்தி(64), இவர் வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் டாஸ்மார்க் நிர்வாக அனுமதியின்றி பார்நடத்தி வருவதாக காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் அவளூர் போலீஸார் சென்று பார் நடத்தி வந்த காந்தியைக் கைது செய்தனர். பின்னர் அவர்மீது  வழக்குப்பதிந்து  சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News