தேசிய நெடுச்சாலை விரிவாக்கப் பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க கலெக்டர் ஆய்வு

காவேரிப்பாக்கம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பகுதிகளில் விபத்துகளைத் தவிர்க்க கலெக்டர்,எஸ்பி ஆகியோர் ஆய்வு;

Update: 2021-12-16 07:32 GMT

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மற்றும் எஸ்பி 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தற்போது நான்கு வழி சாலையாக உள்ளது.  போக்குவரத்து நெரிசல் காரணமாக நெடுஞ்சாலைத்துறை் வாலாஜாப்பேட்டை அடுத்த டோல்கேட்டிலிருந்து சென்னை பூந்தமல்லி வரை 4வழிச்சாலையை 6வழிசாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு  பணிகளை கடந்த 2ஆண்டுகளாக செய்துவருகிறது.

விரிவாக்க பணியால், சாலைவிரிவாக்கப் பகுதிகளில் அதிக விபத்துகள் நடந்து வருவதாகவும் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுபட்டு வருவதாக   தகவல்கள் வந்தன.

தகவலின் பேரில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்,,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் ஆகியோர்  சாலை விரிவாக்கப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.

ஆய்வில் , கிராம சந்திப்புகளான பொன்னியம்மன் பட்டறை, ஓச்சேரி, சிறுகரும்பூர், ஈராளச்சேரி மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய சாலை சந்திப்புகளில் கிராம சாலையில் வேகத்தடை அமைத்தல்,  ஒளிரும் சிக்னல் கம்பங்கள் வைத்தல் சாலையில் எச்சரிக்கைகளை வைத்தல் போன்றவைகள் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்பு அகலப்படுத்தும் பணிகள் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு அரண்கள் மற்றும் குறைந்த வேகத்தில் வாகனங்கள் செல்ல எச்சரிக்கைப் பலகைகளை வைத்து பணிகளைத் தொடரவேண்டும் பணியாளர் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபடாதவாறு   கண்காணிக்க வேண்டும்  என்று ஆட்சியர் நெடுஞ்சாலைப்  பணி ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார் .

மேலும் விபத்துகள் ஏறபடுவதை முற்றிலும் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார் .

ஆய்வில், மாவட்ட  எஸ்பி தீபாசத்தியன்பணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற் கொள்ளதவர்களைக் கண்டு எச்சரிக்கை செய்யுமாறு காவல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.

Tags:    

Similar News