நகராட்சிப் பொறியாளர் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையை அடுத்து வங்கிக்கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டது

Update: 2021-12-07 17:23 GMT

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிவரும் செல்வகுமார் 

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிவரும் செல்வகுமார்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர்  சோதனையில் ஈடுபட்டனர்.  சுமார்15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கட்டுக்கட்டுக்காக லட்சக்கணக்கில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி நகைகள், மற்றும் சொத்துப்பத்திரங்கள் சிக்கியது

பின்னர் ,போலீஸார் அவற்றை மதிப்பீடு செய்ததில்கணக்கில் ரூ 10, லட்சதது73 ஆயிரத்து ,520 க்கு வரை வோலை யாகவும், 23, லட்சத்து 32 ஆயிரத்து்,770 ரூபாய் ரொக்கமாகஇருந்தது . மேலும் தங்கநகைகள் 193.75 சவரன் மற்றும் வெள்ளி 2.17கிலோ எனமதிப்பீடு செய்யப்பட்டு பறிமுதல் செய்தனர்.

மேலும்,திருவள்ளூர் காட்பாடி, இராணிப் பேட்டை, காஞ்சிபுரத்தில் அவர் பெயரிலும், அவர் மனைவி சிவசங்கரி பெயரிலும் பலகோடி மதிப்பில் வாங்கிக் குவித்துள்ள நிலம், வீடு சொத்து பத்திரங்களையும் போலீஸார்பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, பொறியாளர்செல்வம் ,அவர்மனைவி சிவசங்கரி ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புப்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் முதற்கட்டமாக செல்வம்,அவர் மனைவி சிவசங்கரி வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடன் லஞ்ச விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகக்    லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கூறிவருகின்றனர்.

Tags:    

Similar News