ஊர் சுற்றுவதை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை .

காவேரிப்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய.து கொண்டார்.

Update: 2021-06-25 05:28 GMT

காவேரிப்பாக்கம் அண்ணா நகரைச்சேர்ந்தவர் பிச்சாண்டி ,பேருந்து நிலையம் அருகே தள்ளு வண்டியில் டிபன் கடை வைத்துள்ளார்.அவரது மகன் பிரகாஷ்( 26) சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு, ஆட்டோக்களுக்கு தடைவிதித்திருந்ததையொட்டி பிரகாஷ் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஜாலியாக நண்பர்களுடன் குடித்து விட்டு  ஊர்சுற்றி வந்ததுள்ளார். பின்னர் அரசு அறிவித்த தளர்விலும்  கூட ஆட்டோ ஓட்டி சம்பாதிக்காமல் குடித்து வந்ததை அவரது பெற்றோர் கண்டித்து வந்தனர். .இதனால் பிரகாஷ் அடிக்கடி தகராறு செய்துவந்தார். 

நேற்று மாலை குடித்து விட்டு வந்து  வழக்கம் போல் பெற்றோருடன் தகராறு செய்து கொண்டிருந்தார்.  அவரைக் கண்டித்த   அவரது பெற்றோர்  தினசரி வைக்கும்  டிபன் கடையை வைக்க பேருந்து நிலையம் சென்றனர். வீட்டில் யாருமில்லாததை அறிந்த பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

Tags:    

Similar News