காவேரிப்பாக்கம் அருகே பைக் மரத்தில் மோதி இராணுவ வீரர் பலி
காவேரிப்பாக்கம் அருகே உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும் பைக் கட்டுப்பாட்டையிழந்து மரத்தில் மோதியதில் இராணுவவீரர் பலியானார்
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்பவர் மகன் அஜித்குமார் (26). திருமணமாகவில்லை , இவர் கடந்த 6ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ராணுவவீரராக காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.
தற்போது ,ஊரில்புதிய வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற முயற்சித்து வந்த அஜித்குமார், அதற்காக ஒருமாத விடுப்பில் ஊருக்கு வந்தார். இந்நிலையில் அஜித்குமார் சோளிங்கர் அருகே உள்ள புலிவலத்தில் உள்ள உறவினரை பார்க்க பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பினார்.
இடையே சோளிங்கர்-பாணாவரம் சாலையில் ஆயல் அருகே உள்ள வளைவில் வேகமாக திரும்பியதில் பைக் அஜித்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் அங்குள்ள மரத்தில் மோதியது. அதில், பலத்த காயமடைந்த சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பலியாகினார்.
சம்பவ இடத்தில் அஜித்குமாரின் உடல் செடி, கொடிகளுக்கு இடையே உடல் மறைந்து கிடந்ததால் விபத்து நடந்தது குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் காலை அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்ற சிலர் பைக் விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக, பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தப் போலீஸார் , சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ,போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வீடு கட்டுவதற்காக பணியிலிருந்து விடுப்பில் வந்த மகன் விபத்தில் பலியானதை கண்டு அஜித்தின் பெற்றோர் அழுதக்காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச்செய்தது.