சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் அர்ஜுனன் தபசு
சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் நடைபெற்ற அர்ஜுனன் தபசு நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாள் திருவிழாவில் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் கூத்து கலைஞர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திரவுபதி அம்மனுக்கும் அர்ஜுனனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
மகாபாரதத்தின் கதை படி அர்ஜுனன் தபசு மரத்தின் உச்சியில் தவமிருந்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை, குங்குமம், மஞ்சள், மாங்கல்ய கயிறு, வில்வம் இலை உள்ளிட்ட பொருட்களை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி தபசு வழிபாடு செய்தனர்.