மலைக்கோயிலுக்குத் திரும்பினார் அமிர்தவள்ளித் தாயார்

Amirthavalli Thayar -சோளிங்கர் அமிர்தவள்ளித் தாயார் இன்று மலைக்கோயிலுக்குத் திரும்பினார்

Update: 2021-11-15 16:42 GMT

சோளிங்கர் அமிர்த வள்ளித்தாயார் 

Amirthavalli Thayar -இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் உள்ள பிரசித்தி பெற்றதும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக லட்சுமி யோக நரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. கோயிலில் யோகநரசிம்மரும், அருகில் அமிர்தவள்ளித் தாயாரும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்டுதோறும் புரட்டாசி முதல் தேதியில் அமிர்த வள்ளித்தாயார் மலைக்கோயிலில் இருந்து சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோயிலில்  எழுந்தருள்வது வழக்கமாகும்.

அதன் அடிப்படையில்,இந்தாண்டு புரட்டாசி மாதம் முதல் நாளன்று  வழக்கம்போல ஊர்கோயிலில்  எழுந்தருளினார்.   கோயிலில் தாயாருக்கு புரட்டாசி, ஐப்பசி மாத விசேஷங்காளக நவராத்திரி உற்சவம்,  மற்றும் திருக்கல்யாண வைபோகம்,மற்றும் ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தது. ஒவ்வொரு விசேஷத்தின்போதும் அதிகாலையில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து 108 தடவை பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தனர்.

இந்நிலையில் உற்சவங்கள் நிறைவடைந்து மீண்டும் மலைக்கோயிலுக்கு அமிரதவள்ளித்தாயார் சிறப்பு அலங்காரத்துடன் கிளிகூண்டு வாகனத்தில் ஊரவலமாக புறப்பட்டார். அவருடன்  உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பக்தோசிதப் பெருமாளும் விசேஷித்த அலங்காரத்தில் மலையடிவாரம் வரை சென்றார். அங்கு வழியனுப்பும் நிகழ்ச்சியாக சுவாமிக்கும் தயாருக்கும் திருமஞ்சனம் நடந்தது. பின்பு, தாயார் மலைக்கோயிலுக்கு எழுந்தருளினார். அவரைத்தொடர்ந்து பக்தோசிதப் பெருமாளும் ஊர்கோயிலுக்கு திரும்பினார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசிதப் பெருமாள்

இவ்வழியனுப்பும் நிகழ்ச்சியில் வழிநெடுக நின்ற பக்தர்கள் ஸ்வாமியை பக்தியுடன் வழிபட்டனர்.   



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News