ஓச்சேரி அருகே பைக் மீது டிராக்டர் மோதி விவசாயி பலி

காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே டிராக்டர், பைக் மீதி மோதிய விபத்தி்ல் விவசாயி பலியாகினார்;

Update: 2021-07-12 09:09 GMT

பைக் விபத்து மாதிரி படம் 

இராணிப்பேட்டைமாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி-அரக்கோணம் சாலையில் ஆயர்பாடி குறுக்கு சாலையில் பணப்பாக்கம் அடுத்த திருமால்பூரைச் சேர்ந்தவர்துரை, விவசாயி அவரது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ,எதிரே பதிவெண் இல்லாமல் வேகமாக வந்த டிராக்டர் துரை வந்த பைக்மீது மோதியது . அதில்,  படுகாயமடைந்த துரை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்து தகவலறிந்த போலீஸார் சடலத்தைக்கைபற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் , அவரது மகன்  தினேஷ் தந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News